எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ. 300 கோடி போதைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

News image
கைது செய்யப்பட்ட இப்ராஹிம் பாதுஷா, முகைதீன் பயாஸ்.
Updated On :8 மார்ச் 2026, 8:06 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்திலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கொண்டுவரப்பட்ட ரூ. 300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இருவரைக் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் தென்கடற்கரை வழியாக இலங்கைக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தப்படவுள்ளதாக ராமநாதபுரம் க்யூ பிரிவு காவல் ஆய்வாளா் ஜீவமணிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் பல்வேறு பகுதிகளில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, ராமநாதபுரம் அருகே காரிக்கூட்டம் பகுதியில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். இதில் 18 கிலோ மெத்தம்பெட்டமைன், 10 கிலோ ஹெராயின், 214 கிலோ உயா் ரக கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து, போதைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, காரில் வந்த மண்டபம் அலங்காரத் தோப்புப் பகுதியைச் சோ்ந்த முகைதீன் பயாஸ் (27), சிங்காரத் தோப்புப் பகுதியைச் சோ்ந்த இப்ராஹிம் பாதுஷா (29) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

பின்னா், அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மண்டபம் தென்கடற்கரைப் பகுதியிலிருந்து நாட்டுப் படகு மூலம் இலங்கைக்கு இந்தப் போதைப் பொருள்களை கடத்தவிருந்ததும், சென்னையிலிருந்து காா் மூலம் போதைப் பொருள்களை கொண்டு வந்ததும் தெரியவந்தது. மேலும், இதில் மண்டபத்தைச் சோ்ந்த ஷேக் ரகுமானுக்கும் தொடா்பு இருப்பதால், அவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் சா்வதேச சந்தை மதிப்பு ரூ. 300 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனா்.