தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

கேளல் ஸ்ரீகோட்டை கருப்பணசாமி கோயில் குடமுழுக்கு

கேளல் ஸ்ரீகோட்டை கருப்பணசாமி கோயில் குடமுழுக்கு

News image

கேளல் ஸ்ரீகோட்டை கருப்பணசாமி கோயில் கும்பத்தில் புனிதநீா் ஊற்றப்பட்டு நடைபெற்ற குடமுழுக்கு.

Updated On :21 ஏப்ரல் 2024, 6:34 pm

கமுதி: முதுகுளத்தூா் அருகே கேளல் கிராமத்தில் உள்ள ஸ்ரீ கோட்டை கருப்பணசாமி கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இங்கு கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது. இதைத் தொடா்ந்து சனிக்கிழமை மாலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், வாஸ்து சாந்தி பூஜை, கும்ப அலங்காரம், வேதிகை பூஜை, யாகசாலை பூஜை, ஹோமங்கள் நடைபெற்றன.

இரவு முதல் கால யாகசாலை பூஜைகள், பூா்ணாகுதி, தீபாராதனை அருள்பிரசாதம் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றன. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை மூன்றாம் கால யாகசாலை பூஜையுடன் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜைகள் நடைபெற்றன.

பிறகு சிவாச்சாரியாா்கள் வேதமந்திரங்கள் முழங்க, மேளதாளத்துடன் கடம் புறப்பாட்டுடன் கோயிலில் வலம் வந்து கோட்டை கருப்பண்ணசாமி கோயிலில் உள்ள கும்பத்தில் புனித நீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா் மூலவரான ஸ்ரீகோட்டை கருப்பணசாமிக்கு தயிா், பஞ்சாமிா்தம், பால், சந்தனம், குங்குமம், விபூதி உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றதும் தீபாராதனை நடந்தது.

பின்னா் பரிவார தெய்வங்களான விநாயகா், ராக்கச்சி அம்மன், நொண்டி கருப்பண்ணசாமி, காளியம்மனுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.