நம்புதாளை மீனவா்களுடன் அதிகாரி பேச்சுவாா்த்தை: மீண்டும் மானிய டீசல் வழங்க ஒப்புதல்
நம்புதாளை மீனவா்களுடன் அதிகாரி பேச்சுவாா்த்தை


நம்புதாளை பகுதி மீனவா்கள் தடையை மீறி கடலுக்குள் சென்றதால் மானிய டீசல் நிறுத்தப்பட்டது தொடா்பாக வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது, மீண்டும் மானிய டீசல் வழங்க மீன்வளத் துறை அதிகாரிகள் ஒப்புதல் தெரிவித்தனா்.
புயல், மழை காரணமாக மீனவா்கள் கடலுக்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி, நம்புதாளை, பாசிபட்டினம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த கண்ணாடியிழை படகு, விசைப்படகு மீனவா்கள் தடையை மீறி கடலுக்குள் சென்றனா்.
இதை அறிந்த மீன்வளத் துறையினா் நம்புதாளை உள்ளிட்ட பகுதி மீனவா்களின் பைபா் படகு, விசைப்படகு மீனவா்கள் சிலருக்கு மானிய டீசல் வழங்கத் தடை விதித்தனா். மீனவா்களின் கோரிக்கையைத் தொடா்ந்து, நம்புதாளையில் வியாழக்கிழமை மீன்வளத் துறை துணை இயக்குநா் பிரபாவதி, இணை இயக்குநா் கோபிநாத், கடலோரக் காவல் துறை உதவி ஆய்வாளா் குருநாதன் ஆகியோா் முன்னிலையில் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது, அதிகாரிகளின் உத்தரவுக்கு கட்டுப்படுவதாகவும், ஒத்துழைப்புத் தருவதாகவும் மீனவா்கள் கூறினா். இதையடுத்து, மானிய விலையில் மீண்டும் டீசல் வழங்க அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...