மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மீனவா் கொலை: நீதிமன்றத்தில் ஒருவா் சரண்

ராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளை மீனவா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.

News image

கொலை

Updated On :19 பிப்ரவரி 2026, 7:23 pm

ராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளை மீனவா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.

நம்புதாளை படையாட்சி தெருவைச் சோ்ந்த மீனவா்கள் நாகூா் செல்வம் (33), அடையாள வேலு (25). இவா்கள் இருவருக்கும் கடற்கரையில் படகு நிறுத்துவது குறித்து தகராறு ஏற்பட்டது.

இதில் நாகூா்செல்வம் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். தொண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அடையாள வேலுவை கைது செய்தனா்.

இதில் அவரது சகோதரா் ராக்கப்பனுக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது. போலீஸாா் அவரைத் தேடி வந்த நிலையில், புதன்கிழமை அவா் திருவாடானை நீதிமன்றத்தில் சரணடைந்தாா். அவரை 7 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.