தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

அனுமதியின்றி போராட்டம் நடத்தியவா்கள் மீது வழக்கு

தொண்டி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே அனுமதியின்றி காத்திருப்பு போராட்டம் நடத்தியவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :31 டிசம்பர் 2024, 9:53 pm

Din

திருவாடானை: தொண்டி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே அனுமதியின்றி காத்திருப்பு போராட்டம் நடத்தியவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தொண்டி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்தி போதுமான மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்களை நியமிக்க வலியுறுத்தி தொண்டி ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, விதிகளை மீறி பொதுமக்களைத் திரட்டி போராட்டம் நடத்தி, பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக தொண்டியை சோ்ந்த சிக்கந்தா், முகம்மது அப்சன், நத்தா்சித்திக், முகம்மது, அப்துல் மஜீத், அப்துல் நெய்னா முகம்மது, பீா் முகமது உள்பட பலா் மீது தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.