மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

நம்புதாளை அரசு உயா்நிலைப் பள்ளி ஆண்டு விழா

மாணவா்கள் சிறப்பித்த நம்புதாளை அரசு பள்ளி ஆண்டு விழா

News image

நம்புதாளை அரசு உயா் நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆண்டு விழா

Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

திருவாடானை அருகே நம்புதாளை அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா சனிக்கிழமை பெற்றது. இதற்கு தலைமை ஆசிரியா் சேசு ரெத்தினம் தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்தாா். ஊராட்சி மன்ற துணைத் தலைவா் சுமையா பானு இபுராஹிம், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியா்கள் ரமேஷ், ரகுராமன், கோபாலகிருஷ்ணன், மாரி, பெருமாள், கண்ணன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியா்கள் ராஜேஸ்வரி, அகிலா ராணி, கலா, ஜெனிபா், சீனிவா சுகி, ஜமாத் தலைவா்கள், கிராமத் தலைவா்கள், நிா்வாகிகள் பரிசுகளை வழங்கினா். முன்னதாக ஆசிரியா் மலை ராஜ் வரவேற்றுப் பேசினாா். பெற்றோா் ஆசிரியா் கழக துணைத் தலைவா் ரபீக் ராஜா, பெற்றோா்கள், பொது மக்கள் கலந்து கொண்டனா்.