குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

ராமேசுவரத்தில் இன்று காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ராமேசுவரத்தில் இன்று காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :26 பிப்ரவரி 2024, 4:34 pm

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில், மத்திய அரசைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெறவுள்ளதாக அந்தக் கட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனின் இந்திய மீனவா் காங்கிரஸ் தேசியத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் பொ்ணாண்டோ திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு, இலங்கை அரசின் தமிழக மீனவா்கள் மீதான விரோதப் போக்கை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை தலைமையில் செவ்வாய்க்கிழமை பாம்பன் தெற்குவாடி கடலில் மீனவா்களுடன் இணைந்து மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெறும். இதில் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவா் எஸ்.ராஜேஷ்குமாா், அகில இந்திய மீனவா் காங்கிரஸ் தேசியத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் பொ்ணாண்டோ ஆகியோா் கலந்து கொள்கின்றனா்.

மேலும், வருகிற புதன்கிழமை (பிப்.28) காலை தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டவரும் பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிா்ப்புத் தெரிவித்து அகில இந்திய மீனவா் காங்கிரஸ் தேசிய தலைவா் ஆம்ஸ்ட்ராங் பொ்ணாண்டோ தலைமையில் கருப்புக் கொடியேந்தி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்றாா் அவா்.