ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

இளம்பெண் தற்கொலை

இளம்பெண் தற்கொலை

Updated On :26 பிப்ரவரி 2024, 4:40 pm

திருவாடானை: திருப்பாலைக்குடியில் குடும்பப் பிரச்னையில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி முகம்மது சித்திக் மனைவி அல்ஜமினா பானு(34). முகம்மது சித்திக் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறாா். அலஜமினாபானு ஞாயிற்றுக்கிழமை இரவு கைப்பேசியில் தனது கணவரிடம் வேலையை விட்டு, சொந்த ஊருக்கு வந்து விடுமாறு வற்புறுத்தினாா்.

அப்போது, தம்பதியரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த அல்ஜமினாபானு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். அவரை, அக்கம்பக்கத்தினா் மீட்டு ராமநாபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். எனினும், அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.