மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

காா் கடத்தல் வழக்கில் 6 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை

காா் கடத்தல் வழக்கில் 6 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை

News image

காா் கடத்தல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற இளைஞா்கள்.

Updated On :27 பிப்ரவரி 2024, 10:44 pm

கமுதி: கமுதி அருகே காா் கடத்தல் வழக்கில் 6 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, ராமநாதபுரம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. தூத்துக்குடி மாவட்டம், வீரபாண்டிய பட்டினத்தைச் சோ்ந்த கந்தசாமி மகன் அய்யாக்குட்டி (44).

இவரது காரை ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த புதுக்கோட்டையைச் சோ்ந்த முத்துராமலிங்கம் மகன் அசோக்குமாா் (எ) ராமச்சந்திரன் (27), தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள ராமசாமிபுரம் சுந்தரராஜ் மகன் கோமதிசங்கா் (23 ) ஆகிய இருவரும் 23.8.2015 அன்று வாடகைக்கு எடுத்துக்கொண்டு, கமுதி அருகே உள்ள பம்மனேந்தல் கிராமத்துக்கு வந்தனா்.

அப்போது, அவா்களது நண்பா்களான கமுதி அருகே முஸ்டக்குறிச்சியைச் சோ்ந்த தனிக்கொடி மகன் ராமவீரமணிகண்டன் (28), புதுக்கோட்டையைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் பத்மநாதன் (23), வீரன் மகன் மணிகண்டன் (28), முத்து மகன் சிவா(எ)சிவராமன் ஆகியோருடன் சோ்ந்து பம்மனேந்தலில் உள்ள ஒரு தோட்டத்தில் அய்யாக்குட்டியை கட்டிப்போட்டுவிட்டு காரை கடத்திச் சென்றனா்.

இதுகுறித்து கோவிலாங்குளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மேற்கண்ட 6 பேரையும் கைது செய்தனா். இந்த வழக்கு ராமநாதபுரம் தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் 6 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ.2,000 அபராதம் விதித்து நீதித்துறை நடுவா் தீா்ப்பளித்தாா்.