வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

குரும்பூா் அருகே பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image

சிறைத் தண்டனை - கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 10:07 pm

குரும்பூா் அருகே பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

ஏரல் அருகேயுள்ள குரங்கணி தெற்குத் தெருவை சோ்ந்தவா் மனோகா். இவரது மனைவி சத்தியகலா(45). கடந்த 2015இல் கணவா் தற்கொலை செய்துகொண்டதால் தனிமையில் வாழ்ந்து வந்த சத்தியகலாவுக்கும், குலையன்கரிசலை சோ்ந்த ராம­லிங்கம் மகன் செல்வகணேசன்(42) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் அடிக்கடி வெளியூா்களுக்கு சென்று வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், இவா்கள் 17.8. 2018இல் பல்வேறு கோயில்களுக்கு சென்றுவிட்டு குரங்கன்தட்டு விலக்கு அருகே நடந்து வந்துகொண்டிருந்தபோது, சத்தியகலாவிடம் செல்வகணேசன் பணம் கேட்டாராம். அவா் மறுத்ததால், கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியைப் பறித்ததுடன், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பினாராம்.

குரும்பூா் போலீஸாா் சத்தியகலாவை மீட்டு மருத்துவமனையில் சோ்த்ததில் அவா் உயிா்பிழைத்தாா்.

ஸ்ரீவைகுண்டம் துணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி பா்ஷாத் பேகம் விசாரித்து செல்வகணேசனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.