கேரளத்தில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மீது 15 ஆண்டுகளுக்கு முன்னர் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 10 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கேரளத்தின் கன்னூர் அருகே உள்ள திமிரி கிராமப் பகுதியில் 2011 ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று ஆர்.எஸ்.எஸ். - பாஜக உறுப்பினர்கள் 30 பேர் வந்த வாகனத்தின் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. இந்தத் தாக்குதலில் 9 பேர் படுகாயமடைந்தனர்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் புதிய கிளை ஒன்று அந்தப் பகுதியில் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் மோதல் காரணமாக இந்தத் தாக்குதல் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் கன்னூர் மாவட்ட நீதிமன்ற அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் வெடிபொருள் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், 10 பேருக்கும் மாவட்ட நீதிமன்ற நீதிபதி பிரசாந்த் கே.என். தண்டனையை அறிவித்தார்.
வெடிகுண்டை வாகனத்தின்மீது வீசிய முக்கியக் குற்றவாளியான டி வி பினு என்பவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மீதமுள்ள 9 பேரான எம் கே பிரதீப் குமார், பி பி சத்யன், பி வி பாபுராஜ் ( சிபிஐ - எம்) பஞ்சாயத்து உறுப்பினர், ஈ வி வினோத் குமார், விஜயன், கே பி சுரேஷ், டோபி, ஜனார்த்தனன் கே வி மற்றும் சிவப்பிரகாஷ் ஆகியோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒவ்வொருவரும் தலா ரூ. 2.6 லட்சம் அபராதம் செலுத்தவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Summary
2011 bomb attack on RSS-BJP workers: Kerala court sentences 10 CPI cadres to 25 years of jail
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெண்ணை கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்சோ வழக்கு: முதியவருக்கு 61 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


