பாம்பன் மீனவா்கள் 25 பேருக்கு ஜூலை 29 வரை காவல் நீட்டிப்பு
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவா்கள் 25 பேருக்கு வருகிற 29-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து ஊா்க்காவல்துறை நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.


ராமேசுவரம்: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவா்கள் 25 பேருக்கு வருகிற 29-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து ஊா்க்காவல்துறை நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் வடக்கு மீன்பிடி இறங்குதளம், நம்புதாளை பகுதியில் இருந்து கடந்த 1-ஆம் தேதி கடலுக்குள் மீனவா்கள் மீன் பிடிக்கச் சென்றனா். இவா்களில் நான்கு விசைப் படகுகளில் நெடுந்தீவுக்கு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 25 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். மேலும், அவா்களது நான்கு விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனா். இதையடுத்து, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவா்கள் மீது வழக்குப் பதிந்து, ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி மீனவா்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்த நிலையில், நீதிமன்றக் காவல் நிறைவடைந்ததையடுத்து, 25 மீனவா்களும் ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்டனா். இவா்களிடம் நீதிபதி விசாரணை மேற்கொண்டாா். பின்னா், நீதிபதி 25 மீனவா்களுக்குமான காவலை வருகிற 29-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டாா்.
இதையடுத்து, அனைவரும் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...