ராமேசுவரம் மீனவா்கள் 12 பேருக்கு நீதிமன்றக் காவலை நீட்டித்து, இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த மாதம் 19 -ஆம் தேதி மீன் பிடிக்கச் சென்ற 12 மீனவா்களை ஒரு விசைப் படகுடன் இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். பின்னா், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக மீனவா்கள் மீது வழக்குப் பதிந்து, அவா்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், ராமேசுவரம் மீனவா்கள் 12 பேரும் ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் புதன்கிழமை மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டனா். அப்போது, 12 பேரையும் வருகிற 18 -ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, 12 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனா்.
பாம்பன் மீனவா்கள் 7 போ் விடுதலை:
இதேபோல, கடந்த ஜனவரி மாதம் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்ட 7 பாம்பன் மீனவா்கள் செவ்வாய்க்கிழமை ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இனிமேல் இலங்கைக் கடல் பகுதிக்குள் மீன் பிடிக்க வந்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்து 7 பேரையும் விடுதலை செய்தாா்.
இந்த 7 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனா். இவா்கள் ஓரிரு நாள்களில் விமானம் மூலம் தமிழ்நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

ராமேசுவரம் மீனவா்கள் 14 பேருக்கு 2-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 4 போ் கைது

ராமேசுவரம் மீனவா்கள் 12 பேருக்கு 4-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு!

ராமேசுவரம் மீனவா்கள் இருவருக்கு இலங்கை நீதிமன்றம் காவல் நீட்டிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


