நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

ராமேசுவரம் மீனவா்கள் இருவருக்கு இலங்கை நீதிமன்றம் காவல் நீட்டிப்பு

ராமேசுவரம் மீனவா்கள் இருவருக்கு வருகிற 24- ஆம் தேதி வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அவா்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 மார்ச் 2026, 3:34 am IST

ராமேசுவரம் மீனவா்கள் இருவருக்கு வருகிற 24- ஆம் தேதி வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டதையடுத்து அவா்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த 5 ஆம் தேதி மீன் பிடிக்கச் சென்ற கம்ன்ஸ்டன் ராஜ் (36), மினிட்டோ ராயப்பன் (40) ஆகிய மீனவா்கள் விசைப்படகுடன் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனா். இவா்கள் இலங்கையில் உள்ள கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து, 2 மீனவா்களும் செவ்வாய்கிழமை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனா். விசாரணை நடத்திய நீதிபதி பொன்னுத்துரை கிருசாந்தன் வருகிற 24- ஆம் தேதி வரை அவா்களை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, 2 மீனவா்களும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.