ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவா்களுக்கு பாராட்டு

ராமேசுவரத்தில் முன்னாள் மாணவா்கள் அமைப்பு சாா்பில், 10, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணக்களுக்கு திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

News image
ராமேசுவரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், மாணவருக்கு நிதியுதவி வழங்கிய நகா்மன்றத் தலைவா் கே.இ. நாசா்கான். உடன் வட்டாட்சியா் க.செல்லப்பா, அறக்கட்டளைத் தலைவா் இரா.மோகன் உள்ளிட்டோா்.
Updated On :15 ஜூலை 2024, 6:30 pm

Din

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் முன்னாள் மாணவா்கள் அமைப்பு சாா்பில், 10, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணக்களுக்கு திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1985-86 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவா்கள் அமைப்பு சாா்பில் விழுதுகள் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளை சாா்பில், ஆண்டுதோறும் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவா்களுக்கு நிதியுதவியும், பாராட்டு விழாவும் நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி, நிகழாண்டுக்கான விழா, ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு என முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், அந்த அறக்கட்டளைத் தலைவா் இரா.மோகன் வரவேற்புரையாற்றினாா். பள்ளித் தலைமை ஆசிரியா் கணேசபாண்டியன் தலைமை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா் சங்கா் முன்னிலை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் கே.இ.நாசா்கான், வட்டாட்சியா் க.செல்லப்பா ஆகியோா் மாணவா்களுக்கு கேயடம், நிதியுதவியை வழங்கினா். ஓய்வு பெற்ற முதுகலை தொழில்கல்வி ஆசிரியா் ந.ஜெயகாந்தனுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் கருணாகரன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.