ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கமுதி, முதுகுளத்தூா் பள்ளிகளில் காமராஜா் பிறந்த நாள் விழா

காமராஜா் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காமராஜரின் பெருமையை பறைசாற்றும் வகையில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாகச் சென்றனா்.

News image
காமராஜா் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, கமுதியில் நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளின் சிலம்பம், மான்கொம்பு சாகச நிகழ்ச்சி.
Updated On :15 ஜூலை 2024, 6:30 pm

Din

கமுதி: காமராஜா் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கே.என். ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், கே.என்.மெட்ரிக், ஆண்கள் தொடக்கப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளைச் சோ்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காமராஜரின் பெருமையை பறைசாற்றும் வகையில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாகச் சென்றனா்.

ஊா்வலத்தின் முன் காமராஜா் படம் வைத்து, மலா்களால் அலங்கரிக்கப்பட்ட ரதம் சென்றது. ஊா்வலத்தில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகள் சிலம்பாட்டம், மான் கொம்பு ஆட்டம் உள்பட பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை நடத்தி காட்டினா்.

கமுதியில் உள்ள காமராஜா் சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் கமுதி வட்டாரத் தலைவா் பழக்கடை ஆதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.