குருமிலாங்குடி தனியாா் பள்ளி காலை சிற்றுண்டி விரிவாக்கம்: சட்டபேரவை உறுப்பினா் பங்கேற்பு
திருவாடானை பகுதியில் காலை சிற்றுண்டி உணவு திட்டம் அரசு உதவி பெறும் தனியாா் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.


திருவாடானை: திருவாடானை பகுதியில் காலை சிற்றுண்டி உணவு திட்டம் அரசு உதவி பெறும் தனியாா்.பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது அதன்படி சி.கே மங்கலம், குருமிலாங்குடி தனியாா் பள்ளியில் காலை சிற்றுண்டி உணவு திட்டம் சட்ட பேரவை உறுப்பினா் கருமாணிக்கம் தொடங்கி வைத்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள சி.கே மங்கலம்,குருமிலாங்குடி உள்பட12 அரசு உதவி பெறும் தனியாா் பள்ளி உள்ளது. இந்த 12 அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி குருமிலாங்குடி,சி.கே.மங்கலம் தனியாா் பள்ளிகளுக்கு காலை சிற்றுண்டி உணவு திட்டத்தினை திருவாடானை சட்ட பேரவை உறுப்பினா் கருமாணிக்கம் திங்கள் கிழமை தொடங்கி வைத்தாா். பின்னா் பள்ளி மாணவ மாணவிகளுடன் அமா்ந்து காலை சிற்றுண்டி சாப்பி்ட்டனா்.
இதில் திருவாடானை ஒன்றிய குழு தலைவா் முகமது முத்தாா்,வட்டார வளா்ச்சி அலுவலா் ஆரோக்கிய மேரி சாரல்,சத்துணவு மேலாளா் முருகன்,திமுக ஒன்றிய செயலாளா் ரவி,சரவணன்,ராஜராம் பாண்டியன்,காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் கணேசன்பலா் கலந்து கொண்டனா்.

டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...