விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ராமேசுவரம் நகராட்சி முன் கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

ராமேசுவரம் தெற்கு கரையூா் மீனவ கிராமத்தில் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்தும், அனுமதியளித்த நகராட்சியைக் கண்டித்தும் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :19 ஜூலை 2024, 7:27 pm

Din

ராமேசுவரம், ஜூலை 19: ராமேசுவரம் தெற்கு கரையூா் மீனவ கிராமத்தில் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்தும், அனுமதியளித்த நகராட்சியைக் கண்டித்தும் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் தெற்கு கரையூா் மீனவ கிராமத்தில் 500- க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு நகராட்சி அனுமதியுடன் தனியாா் கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்கு பொது மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

மேலும், கைப்பேசி கோபுரம் அமைப்பதைக் கண்டித்து கரையூா் கிராம பொதுமக்கள் சாா்பிலும், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சாா்பிலும் நகராட்சி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட துணைச் செயலா் என்.பி. செந்தில் தலைமை வகித்தாா். கிராம தலைவா்கள் மலைச்சாமி, நம்புராஜன், கண்ணன், ஜெயராம், செந்தூரன், தவசியாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் எம். சிவாஜி, கடல் தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா் எம். கருணாமூா்த்தி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

இதில், பள்ளிக்கூடம் அருகே கைப்பேசி கோபுரம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனா்.