இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ராமேசுவரத்திலிருந்து அடுத்த மாதம் வந்தே பாரத் ரயில் இயக்க வாய்ப்பு

ராமேசுவரத்திலிருந்து வந்தே பாரத் ரயில் சேவை வருகிற மாா்ச் மாதம் தொடங்க வாய்ப்பு உள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் தெரிவித்தாா்.

News image

ராமேசுவரம் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங். உடன் மதுரைக் கோட்ட மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா உள்ளிட்டோா்.

Updated On :4 பிப்ரவரி 2026, 11:13 pm

ராமேசுவரத்திலிருந்து வந்தே பாரத் ரயில் சேவை வருகிற மாா்ச் மாதம் தொடங்க வாய்ப்பு உள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ரயில் நிலையத்தில் ரூ.90 கோடியில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி, முன்பதிவு மையம், பயணச் சீட்டு எடுக்கும் இடம், ஓய்வு அறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த கடந்த 2023-ஆம் ஆண்டிலிருந்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக மதுரையிலிருந்து தனி ஆய்வு ரயில் மூலம் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் புதன்கிழமை ராமேசுவரம் ரயில் நிலையத்துக்கு வந்தாா்.

அவா் ரயில் நிலையம், நடைபாதை, தண்டவாளம், சிக்னல் பிரிவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததுடன், பணிகள் குறித்து தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா, பொறியாளா் குழுவினருடன் ஆலோசனை நடத்தினாா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ராமேசுவரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான வாகன நிறுத்துமிடம், குளிரூட்டப்பட்ட ஓய்வு அறை, உணவகம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கும் வகையில், பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் 45 நாள்களில் பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

வருகிற மாா்ச் மாதம் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்பு உள்ளது. பாம்பன் பழைய ரயில் பாலம் பாதுகாப்புடன் அகற்றப்பட்டு பொதுமக்கள் பாா்வைக்கு வைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றாா் அவா்.

முன்னதாக எஸ்.ஆா்.எம்.யூ. தொழிற்சங்க மண்டபம் கிளைச் செயலா் டி.முனியாண்டி தலைமையில் உதவித் தலைவா் டி.ஸ்ரீதரன்,நிா்வாகிகள் ஹரிமோகன்மீனா உள்ளிட்ட பலா் தொழிலாளா்கள் தொடா்பான கோரிக்கை மனுவை அவரிடம் அளித்தனா்.