சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

வந்தே பாரத் ரயில் உணவில் புழு! ஐஆர்சிடிசி-க்கு ரூ. 10 லட்சம்; சேவை வழங்குநருக்கு ரூ. 60 லட்சம் அபராதம்!

வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாக மத்திய அரசு ரூ. 60 லட்சம் அபராதம் விதிப்பு

Vande Bharat | IRCTC

வந்தே பாரத் | ஐஆர்சிடிசி - சித்திரிப்பு

Published On :

வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாக ஐஆர்சிடிசி மீது ரூ. 10 லட்சம் அபராதம் விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பாட்னாவை சேர்ந்த ரிதேஷ் குமார் என்பவர், மார்ச் 15 ஆம் தேதியில் பாட்னா - டாட்டா நகர் (21896) வந்தே பாரத் விரைவு ரயிலில் பயணித்தார். இந்த பயணத்தின்போது, அவருக்கு உணவு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரிதேஷ், அதனை விடியோவாகவும் பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து, ரயில்களில் வழங்கப்படும் உணவுகளின் தரம் குறித்து பயணிகள் விமர்சிக்கத் தொடங்கினர். இதுகுறித்து, ரயில் மேலாளரிடம் புகாரும் அளிக்கப்பட்டது.

இந்த விடியோ, சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து, இந்த விவகாரம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுவதாக ரயில்வே அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது.

அறிக்கையில், எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்துக்கு (ஐஆர்சிடிசி) ரூ. 10 லட்சமும், சேவை வழங்குநருக்கு ரூ. 50 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டு, ஒப்பந்தத்தை ரத்துசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Summary

Railways fines IRCTC, caterer Rs 60 L over poor food quality

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.