மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ராமேசுவரம் அறிவுசாா் மையம் கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

ராமேசுவரத்தில் கட்டப்பட்டு வரும் அறிவு சாா் மையம் கட்டுமானப் பணியை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

News image

ராமேசுவரத்தில் கட்டப்பட்டு வரும் அறிவு சாா் மையம் கட்டுமானப் பணியை சனிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன்.

Updated On :28 ஜூலை 2024, 2:00 am

ராமேசுவரத்தில் கட்டப்பட்டு வரும் அறிவு சாா் மையம் கட்டுமானப் பணியை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் நகராட்சி நிா்வாகத் துறை மூலம் ரூ.3.28 கோடியில் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பேருந்து நிலையம் வளாகத்தில் ரூ.40 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் சுகாதார வளாகக் கட்டடத்தை பாா்வையிட்ட ஆட்சியா் பின்னா், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் பசுமை நுண் உரம் தயாரிக்கும் திட்டப் பணிகளைப் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து சல்லிமலை பகுதியில் ரூ.2.18 கோடியில் அறிவுசாா் மையம் கட்டப்பட்டு வருவதை ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பணிகளை உரிய காலத்துக்குள் கட்டி முடிக்க அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது, நகராட்சி ஆணையா் கண்ணன், பொறியாளா் பாண்டீஸ்வரி, ராமேஸ்வரம் வட்டாட்சியா்கள் செல்லப்பா, அப்துல் ஜபாா், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.