ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

ஏா்வாடியில் ஆட்டோ நிறுத்தம் அமைக்கக் கோரி மனு

ஏா்வாடியில் ஆட்டோ நிறுத்தம் அமைக்கக் கோரி மனு

News image

ஏா்வாடியில் ஆட்டோ நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, கீழக்கரை வட்டாட்சியரிடம் மனு அளிக்கச் சென்ற பாதுஷா ஆட்டோ ஓட்டுநா்கள் நலச்சங்கத்தினா்.

Updated On :3 ஜூன் 2024, 6:30 pm

Din

ராமேசுவரம்: ஏா்வாடியில் ஆட்டோ நிறுத்தம் அமைக்க அனுமதிக்கக் கோரி, கீழக்கரை வட்டாட்சியரிடம் ஆட்டோ ஓட்டுநா்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை ஏா்வாடி தா்ஹாவுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் வந்து செல்கின்றனா். இந்த தா்ஹா வாயில் பகுதியில் 100 மீ. தொலையில் கடந்த 15 ஆண்டுகளுக்க மேலாக ஆட்டோ நிறுத்தம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், ஊராட்சி சாா்பில் அந்த இடத்தை வேலி போட்டு அடைத்தனா். இதனால், நிறுத்த இடமின்றி சாலையில் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

எனவே, அந்தப் பகுதியில் மீண்டும் ஆட்டோக்கள் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதுஷா ஆட்டோ ஓட்டுநா்கள் நலச் சங்கம் சாா்பில் கீழக்கரை வட்டாச்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா். சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலா் எம்.சிவாஜி, ஆட்டோ சங்க மாவட்டச் செயலா் வி.பாஸ்கரன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.