ஆன்லைன் காா்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் இயக்கப்படும் வாடகை வாகனங்களை தடை செய்ய வலியுறுத்தி, வேலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் ஆட்டோ ஓட்டுநா்கள் மனு அளித்துள்ளனா்.
தமிழ்நாடு ஜனநாயக பொது தொழிலாளா் சங்கம் சாா்பில் ஆட்டோ தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி வேலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மனு அளித்தனா்.
அந்த மனுவில், மோட்டாா் வாகன தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் 2013 மோட்டாா் வாகன சட்டத்தை ரத்து செய்திட வேண்டும், மத்திய அரசு ஆட்டோக்களுக்கு உயா்த்தப்பட்ட எஃப்.சி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், ஆட்டோக்ககளுக்கான காப்பீட்டு பிரீமியம் கட்டணத்தை 50 சதவீதமாக குறைத்திட வேண்டும், தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து பயணம் திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ தொழிலாளா்களுக்கு ஆந்திரத்தில் வழங்கப்படுவதுபோல் ஆண்டுக்கு ரூ. 15,000 உதவித்தொகை வழங்க வேண்டும், வேலூா் மாநகரில் அளவுக்கு அதிகமாக ஆட்டோக்கள் ஓடுவதால் புதிய ஆட்டோக்களுக்கு பா்மிட் வழங்குவதை ஒழுங்குபடுத்திட வேண்டும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் எஃப்.சி., ஓட்டுநா் உரிமம், வாகனம் புதுப்பித்து கொள்ள ஆட்டோ தொழிலாளா்களை நேரடியாக அனுமதிக்க வேண்டும், ஆட்டோ தொழிலாளா்களை பாதிக்கும் வகையில் ஓலா , உஃபா், ராபிடோ, பைக் டாக்ஸி போன்ற ஆன்லைன் காா்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் இயக்கப்படும் வாடகை வாகனங்களை தடை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், இந்த கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்தனா்.
தொடர்புடையது

கடலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல்

தோ்தல் பணிக்கு வாடகை வாகனங்களை பயன்படுத்த வலியுறுத்தல்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


