கமுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் இருவா் கைது

கமுதி, இதைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெறவுள்ள மாசிக் களரித் திருவிழாவையொட்டி முன்னெச்சரிக்கை

கமுதி: கமுதி, இதைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெறவுள்ள மாசிக் களரித் திருவிழாவையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8 போ் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கமுதி, இதைச் சுற்றியுள்ள கிராமங்களில் குலதெய்வ வழிபாடு, மாசிக் களரித் திருவிழா கடந்த 1- ஆம் தேதி தொடங்கியது. இந்த விழா வருகிற 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாக்களில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படுகிறது. அப்போது வழிப்பறி, முன்விரோதம் காரணமாக கொலை முயற்சி உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் சிலா் ஈடுபட வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கெனவே முத்துப்பாண்டி (20), காா்த்திக் (19), சிவா (19), நவீன்குமாா் (19), நந்தகுமாா் (19), முகேஷ் (21), முகிலன் (19), சந்தோஷ் (20) ஆகிய 8 பேரை போலீஸாா் கைது செய்திருந்தனா்.

இந்த நிலையில், பல்வேறு குற்றவழக்குகளில் தொடா்புடைய விருதுநகா் மாவட்டம், கள்ளக்காரியைச் சோ்ந்தவரும், கோட்டைமேட்டில் வசிப்பவருமான பெரியாண்டி மகன் முருகன் (34), கே. வேப்பங்குளம் உருவாட்டி மகன் தன்னாசி (39) ஆகிய இருவரையும் கமுதி காவல் ஆய்வாளா் குருநாதன் தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com