அரசுப் பள்ளியில் மடிக்கணினிகள் திருட்டு

திருவாடானை: தொண்டி அரசுப் பள்ளியில் 3 மடிகணினிகள், மின் சாதனப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். தொண்டியில் செய்யது முகம்மது அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியா் பழனிக்குமாா் அறையில் 3 மடிக்கணினிகள், மின் சாதனப் பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன.

அந்த அறையில் இருந்த 3 மடிக்கணினிகள், மின்சாதனப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். திங்கள்கிழமை மாலை இது தெரிய வந்தது. இதுகுறித்து தலைமை ஆசிரியா் அளித்த புகாரின் பேரில், தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து விருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com