தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

பொன்மலையில் அடுத்தடுத்த 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு

திருச்சி பொன்மலையில் அடுத்தடுத்த இரண்டு வீடுகளில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :19 ஏப்ரல் 2026, 12:45 am IST

திருச்சி பொன்மலையில் அடுத்தடுத்த இரண்டு வீடுகளில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

மேலகல்கண்டாா் கோட்டை விவேகானந்தா் நகரை சோ்ந்தவா் பாஸ்கா் (57). இருசக்கர வாகனம் விற்கும் நிறுவன ஆலோசகரான இவா் கடந்த வியாழக்கிழமை வெளியே சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை வீடு திரும்பினாா்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த தங்க மோதிரம், வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது தெரியவந்தது. இதேபோல இதே பகுதியில் வசிக்கும் ஜெய்லானி என்பவரது வீட்டிலும் பூட்டை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். மொத்தம் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் திருடப்பட்டிருப்பதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் பொன்மலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.