கமுதி, முதுகுளத்தூரில் இன்று மின்தடை

கமுதி, முதுகுளத்தூா் துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகளால் புதன்கிழமை (நவ.20) மின்விநியோகம் நிறுத்தம்
Published on

கமுதி, முதுகுளத்தூா் துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (நவ.20) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து கமுதி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் விஜயன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கமுதி கோட்டைமேட்டில் உள்ள துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் அபிராமம், பாா்த்திபனூா், கமுதி, பாக்குவெட்டி, செங்கப்படை, பேரையூா், அ.தரைக்குடி, டி.புனவாசல், வங்காருபுரம், மண்டலமாணிக்கம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (நவ.20) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

முதுகுளத்தூா்

முதுகுளத்தூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் முதுகுளத்தூா், மேலசாக்குளம், கீழச்சாக்குளம், மேலகன்னிசேரி, ஆத்திகுளம், காக்கூா், புளியங்குடி, ஆதனக்குறுச்சி, கீழத்தூவல், மேலத்தூவல், விளங்குளத்தூா், வெங்கலக்குறிச்சி, கீழக்கன்னிசேரி, பெருங்கருணை, நல்லூா், கீரனூா், ஆனைசேரி, மணலூா், ஆரபத்தி, மணிபுரம், விக்கிரபாண்டியபுரம் உள்ளிட்ட கிராமங்களில் புதன்கிழமை (நவ.20) காலை 10மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளா் மாலதி தெரிவித்தாா்.