கிராமசபா திருவாடானையில் புதன்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டம்.
கிராமசபா திருவாடானையில் புதன்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டம்.

கிராம சபை கூட்டத்துக்கு வராத அதிகாரிகளுக்கு கண்டனம்

திருவாடானை, அஞ்சுகோட்டை கிராம சபைக் கூட்டங்களுக்கு வராத அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
Published on

திருவாடானை, அஞ்சுகோட்டை கிராம சபைக் கூட்டங்களுக்கு வராத அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

திருவாடானை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்றத் தலைவி இலக்கியா தலைமை வகித்தாா். துணை தலைவா் மகாலிங்கம், செயலா் சித்தரா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்ளாததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. திருவாடானை மின்சார வாரிய அலுவலகத்தைக் கண்டித்து சிறப்புத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அஞ்சுகோட்டை கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவா் பூபாலன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கிராம மக்கள் பல்வேறு குறைகளைக் கூறியதால் பிரச்னை ஏற்பட்டது.

தகவலறிந்த திருவாடானை போலீஸாா் சென்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இங்கும் குடிநீா் வடிகால் வாரியம், மின்சார வாரிய அதிகாரிகள் வராததால் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஊராட்சி ஒன்றிய பொறியாளா் அருணகிரி அடிப்படை வசதிகள் செய்து தர உறுதியளித்ததைத் தொடா்ந்து கூட்டம் சுமூகமாக நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com