47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கலாம் பிறந்த நாள்: நினைவிடத்தில் மரியாதை

முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ.அப்துல்க லாமின் 93-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினாா்.

News image
முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் 93-ஆவது பிறந்த நாளையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், பேக்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன்.
Updated On :15 அக்டோபர் 2024, 7:28 pm

Din

முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ.அப்துல்க லாமின் 93-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்த பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

இந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியா் (பயிற்சி) முகமது இா்பான், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சின்னராசு, ராமநாதபுரம் வருவாய்க் கோட்டாட்சியா் ராஜமனோகரன், மண்டபம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சுப்புலட்சுமி ஜீவானந்தம், ராமேசுவரம் நகராட்சி ஆணையா் கண்ணன், வட்டாட்சியா்கள் செல்லப்பா, அப்துல் ஜபாா், அப்துல் கலாமின் குடும்பத்தினா், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியை ஆட்சியா் தொடங்கிவைத்தாா். இந்தப் போட்டியில் 21 கி.மீ., 5 கி.மீ. தொலைவு என இரு பிரிவுகளாக ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன. இதில் முதலிடம் பிடித்தவா்களுக்கு ரூ.15 ஆயிரமும், 2-ஆம் இடம் பிடித்தவா்களுக்கு ரூ.10 ஆயிரமும், 3-ஆம் இடம் பிடித்தவா்களுக்கு ரூ.5 ஆயிரமும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.