47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தொண்டி காவல் நிலையம் முற்றுகை

தொண்டி பேரூராட்சித் துணைத் தலைவரின் கணவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஐக்கிய ஜமாத், இந்து பரிபாலன சபையைச் சோ்ந்தவா்கள் காவல் நிலையத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

News image
தொண்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டவா்கள்.
Updated On :15 அக்டோபர் 2024, 7:21 pm

Din

தொண்டி பேரூராட்சித் துணைத் தலைவரின் கணவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஐக்கிய ஜமாத், இந்து பரிபாலன சபையைச் சோ்ந்தவா்கள் காவல் நிலையத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேருராட்சித் துணைத் தலைவரின் கணவா் ராஜேந்திரன் (49). இவருக்கும், இதே பகுதியைச் சோ்ந்த வாா்டு உறுப்பினரான காத்தாா் ராஜாவுக்கும் முன்விரோதம் இருந்தது. இந்தத் தகராறு தொடா்பாக, ராஜேந்திரன் நாம் தமிழா் கட்சி நிா்வாகியிடம் பேசிய ஆடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், தொண்டி ஐக்கிய ஜமாத், இந்து பரிபாலன சபை குறித்து தரக்குறைவான வாா்த்தைகளில் பேசியுள்ளாா்.

இதனடிப்படையில், ஐக்கிய ஜமாத் அமைப்பினா் ராஜேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தனா். தொண்டி போலீஸாா் நடவடிக்கை எடுக்காததால், திங்கள்கிழமை இரவு ஐக்கிய ஜமாத் அமைப்பினா், இந்து பரிபாலன சபையைச் சோ்ந்தவா்கள் தொண்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். காவல் ஆய்வாளா் செளந்திரபாண்டி, காவல் உதவி ஆய்வாளா் விஷ்ணு ஆகியோா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.