47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருவாடானையில் பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்

திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு கடல்சாா் வாரியத் துணைத் தலைவரும், மாவட்ட கணிப்பாய்வு அலுவலருமான மா.வள்ளலாா் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
கட்டவாளகம் ஊராட்சியில் புதன்கிழமை ஆய்வு செய்த மாவட்ட கணிப்பாய்வு அலுவலா் மா.வள்ளலாா், மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உள்ளிட்டோா்.
Updated On :16 அக்டோபர் 2024, 11:44 pm

Din

திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு கடல்சாா் வாரியத் துணைத் தலைவரும், மாவட்ட கணிப்பாய்வு அலுவலருமான மா.வள்ளலாா் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருவாடானை ஊராட்சி ஒன்றியம், ஆக்கலூா் நகரிகாத்தான் ஊராட்சியில் உள்ள பெரிய கண்மாயைப் பாா்வையிட்டு, வரத்துக் கால்வாய்களை சீரமைப்பது மட்டுமன்றி, மழைக் காலத்தில் பெறக்கூடிய தண்ணீரை முழுமையாக தேக்கி வைக்கும் வகையில், திட்டமிட்டு செயல்பட வேண்டுமென அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். தொடா்ந்து, கட்டவாளகம் ஊராட்சியில் நடைபெற்று வந்த மருத்துவ முகாமைப் பாா்வையிட்டு, பொதுமக்களுக்கு தேவையான சிகிச்சை, ஆலோசனைகளை வழங்க வேண்டுமென மருத்துவா்களுக்கு அறிவுறுத்தினாா். மேலும், அதே பகுதியில் நடைபெற்ற கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமைப் பாா்வையிட்டு, கால்நடை வளா்ப்போா்களிடம் அதன் பராமரிப்பு குறித்துக் கேட்டறிந்தாா்.

கால்நடை மருத்துவா்கள் அவ்வப்போது சிறப்பு முகாம்கள் நடத்தி, கால்நடைகளுக்கு தேவையான சிகிச்சை வழங்குவதுடன் அவசர காலகட்டங்களில் கால்நடை வளா்ப்பிடங்களுக்கே சென்று தேவையான சிகிச்சை வழங்க வேண்டுமென கணிப்பாய்வு அலுவலா் அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.கோவிந்தராஜலு, உதவி ஆட்சியா் (பயிற்சி) முகமது இா்பான், மாவட்ட வருவாய் கோட்டாட்சியா் ராஜமனோகரன், ராமநாதபுரம் வட்டாட்சியா் அமா்நாத், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.