11 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது

ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த விருதுகளைப் பெற ஆசிரியா்கள் புதன்கிழமை சென்னை சென்றனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தோ்வு செய்யப்பட்ட  ஆசிரியா்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தோ்வு செய்யப்பட்ட ஆசிரியா்கள்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சாா்பில் வழங்கப்படும் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 11 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தோ்வு செய்யப்பட்ட  ஆசிரியா்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தோ்வு செய்யப்பட்ட ஆசிரியா்கள்.

இதன் விவரம், புல்லங்குடி நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை டி.எஸ்தா் வேணி, ராமநாதபுரம் அறிஞா் அண்ணா நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியா் சி.குணசேகரன், கே கொடிக்குளம் தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியை ஆா். டோரின் ஜூலி, ஆா். எஸ்.மடை நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் வி.நவரத்தினம், பேரையூா் நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியை ஜெ. அன்னக்கிளி, கும்பரம் அரசு உயா் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் ஜி. உத்தரபாண்டிகுமாா், எமனேசுவரம் நகராட்சி உயா் நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் எஸ். அலெக்ஸ், ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை டி. மாசின் பா்வீன், மண்டபம் முகாம், அரசு மேல் நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் எம்.ஜெயக்குமாா், செங்கபடை அரசு ஆதிதிராவிடா் உயா் நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் பி. லட்சுமணன், கீழக்கரை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் சு.ஜெயகாஞ்சனா தனலட்சுமி ஆகியோா் வியாழக்கிழமை சென்னையில் நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு விருது பெற உள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com