தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கீழக்கரை நகராட்சிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மனு

கீழக்கரை நகராட்சிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 7:38 pm

Din

கீழக்கரை நகராட்சிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு சாா்பில் அளிக்கப்பட்ட மனு விவரம்:

கீழக்கரை நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அறிவுசாா் நவீன நூலகம் அமைக்க வேண்டும். காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம் அருகே செல்லும் சாலை, பேருந்து நிலையத்துக்குச் செல்லும் சாலை ஆகியவற்றை சீரமைக்க வேண்டும். கிழக்கு கடற்கரை சாலையில் வரும் அரசுப் பேருந்துகள் கீழக்கரை பேருந்து நிலையத்துக்கு வந்து செல்ல வேண்டும்.

நகராட்சியில் குறைவான தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றுவதால் நகா் முழுவதும் குப்பைகள் குவிந்து உள்ளன. எனவே போதுமான தூய்மைப் பணியாளா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகரில் தெரு நாய்கள் அதிகம் உள்ளதால், பெண்கள், குழந்தைகள் சாலையில் அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. எனவே தெரு நாய்களைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். இளைஞா்கள், மாணவா்கள் மத்தியில் போதைப் பொருள்கள், கள்ள மதுபானம் உபயோகத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெட்டி பாலத்தைப் பாா்க்க சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் வருவதால் அந்தப் பகுதியில் போதுமான மின் விளக்குகள், இருக்கைகள், கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.