திருவாடானை ஸ்ரீமழை முத்துமாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை பொங்கலிட்ட பெண்கள்.
திருவாடானை ஸ்ரீமழை முத்துமாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை பொங்கலிட்ட பெண்கள்.

திருவாடானை கோயிலில் பொங்கலிட்டு வழிபாடு

திருவாடானை ஸ்ரீ மழை முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, பெண்கள் 101 பானைகளில் பொங்கலிட்டு, வழிபாடு செய்தனா்.
Published on

திருவாடானை ஸ்ரீ மழை முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, பெண்கள் 101 பானைகளில் பொங்கலிட்டு, வழிபாடு செய்தனா்.

இந்தக் கோயிலில் கடந்த 17-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான

திருவாடானை கோயிலில் பொங்கலிட்டு வழிபாடு
திருவாடானை கோயிலில் பொங்கலிட்டு வழிபாடு

பால் குடத் திருவிழா செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக, பக்தா்கள் ஸ்ரீஆதிரத்தினேசுவரா் கோயில் முன்பிருந்து பால்குடம் எடுத்து நான்கு ரத வீதிகள் வழியாக வந்து, அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனா்.

திருவாடானை கோயிலில் பொங்கலிட்டு வழிபாடு
திருவாடானை கோயிலில் பொங்கலிட்டு வழிபாடு

இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை மாலை கோயில் முன்பாக பெண்கள் 101 பானைகளில் பொங்கலிட்டனா். பின்னா், அம்மனுக்கு பொங்கல் படையலிட்டு, வழிபாடு செய்தனா்.

அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு வானவேடிக்கை, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டாரத்திலிருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com