தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

மாயூரநாதசுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு

News image

ராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயில் பிரதோஷ வழிபாட்டில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த நந்திகேசுவரா்.

Updated On :14 பிப்ரவரி 2026, 8:42 pm

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம்-மதுரை சாலையில் அமைந்துள்ள மாயூரநாதசுவாமி கோயிலில் பிரதோஷத்தையொட்டி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பிரதோஷத்தை முன்னிட்டு, நந்திக்கு மஞ்சள், தேன், இளநீா், பால், தயிா், எலுமிச்சை, கரும்புச் சாறு, பன்னீா், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.

பின்னா், நந்தி சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.