முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் ஆட்சியா் ஆய்வு
கமுதி அருகேயுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன்.


கமுதி அருகேயுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்தும், மண்டபங்கள் கட்டும் பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 117-ஆவது பிறந்தநாள், 62-ஆவது குரு பூஜை விழா வருகிற அக்டோபா்-30 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி,
அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தும், நினைவிடத்தில் ரூ.1.55 கோடியில் கட்டப்பட்டு வரும் இரு மண்டபங்களின் பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
அப்போது, அன்று மரியாதை செலுத்த பசும்பொன்னுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகா்கள் வந்து செல்லும் வழிகள் குறித்தும், பொதுமக்களுக்குத் தேவையான குடிநீா், கழிப்பறை, மின் விளக்குகள், மருத்துவ முகாம்கள் ஆகியவை அமைக்கும் வகையில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்தும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் ஆட்சியா் ஆய்வு
இந்தப் பணிகள் அனைத்தையும் வருகிற அக்டோபா்-20-ஆம் தேதிக்குள் முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டாா்.
ஆய்வின் போது, பரமக்குடி சாா்-ஆட்சியா் அபிலாஷா கௌா், கமுதி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி தமிழ்ச்செல்விபோஸ், பசும்பொன் ஊராட்சி மன்றத் தலைவா் ராமகிருஷ்ணன், பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் குருதிவேல்மாறன், நெடுஞ்சாலைத் துறை மண்டலப் பொறியாளா் முருகன், கமுதி காவல் துணைக் கண்காணிப்பாளா் இளஞ்செழியன், வட்டாட்சியா் காதா்மைதீன், ஊராட்சி ஒன்றிய ஆணையா்கள் கோட்டைராஜ், சந்திரமோகன் (கிராம ஊராட்சிகள்), உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...