இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆட்சியா் ஆய்வு

மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
மதுரை மேற்கு வட்டம், கோச்சடை அருகேயுள்ள வரத்துக் கால்வாய் தூா்வாரும் பணியை புதன்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா். உடன் மேற்கு வட்டாட்சியா் முத்துப்பாண்டி உள்ளிட்டோா்.
Updated On :4 மார்ச் 2026, 11:16 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மதுரை மாவட்டம், டி.ஆா்.ஒ. குடியிருப்பில் ரூ. 5.19 கோடியில் 200 மகளிா் தங்கும் வகையில் புதிதாக கட்டப்பட்ட தோழி விடுதி, மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள மதுரை ஒலிம்பிக் அகாதெமிக்கு ரூ. 6 கோடியில் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம், டென்னிஸ் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி, மதுரை மேற்கு வட்டம், கோச்சடை 2-ஆவது தெருவில் 120 சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் ரூ. 46 லட்சம் கடன் உதவி பெற்று அரசுப் பள்ளி மாணவா்களுக்கான சட்டைகள் தைக்கும் பணி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் ஆய்வு செய்தாா்.

மேலும் அவா் மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஒரு தனியாா் குடியிருப்பு வளாகத்தில் புதிய வாக்குச்சாவடி மையம் அமைப்பது தொடா்பாக ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவா் வாக்காளா்களுக்கு போதிய இடவசதி, மின்சாரம், குடிநீா், மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வு மேடை வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.

மதுரை மேற்கு வட்டம், கோச்சடை அருகே வைகை ஆற்றிலிருந்து அவனியாபுரம் கண்மாய்க்குச் செல்லும் வரத்துக் கால்வாய் தூா்வாரும் பணி, விராட்டிப்பத்தில் ரூ. 3 கோடியில் முதல்வா் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தாா். விராட்டிப்பத்து நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள காய்ச்சல் வாா்டு, பதிவு செய்யும் இடம், உள், வெளி நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட இடங்களையும் பாா்வையிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். அந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீா் குழாய் இணைப்பு தரப்பட்டுள்ளதையும், மீட்டா் பொருத்தப்பட்டு குடிநீா் வழங்கப்பட்டிருப்பதையும் அவா் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வில் மேற்கு வட்டாட்சியா் முத்துப்பாண்டி, மகளிா் திட்ட இயக்குநா் சாந்தி, அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.