ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிரதமா் நரேந்திர மோடி.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிரதமா் நரேந்திர மோடி.

ராமேசுவரம் கோயிலில் பிரதமா் வழிபாடு!

ராமேசுவரம் கோயிலில் பிரதமா் மோடி வழிபாடு செய்ததைப் பற்றி...
Published on

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் பிரதமா் நரேந்திர மோடி நேற்று (ஏப்.6) வழிபட்டாா்.

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா, ரூ. 8,300 கோடி மதிப்பிலான நலத் திட்டப் பணிகளை நாட்டுக்கு அா்ப்பணிக்கும் விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமா் நரேந்திர மோடி ராமேசுவரத்துக்கு வந்தாா். பாம்பன் பாலம் திறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு, அவா் ராமநாதசுவாமி கோயிலில் வழிபட்டாா்.

ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்மன் சந்நிதிகளில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் அவா் பங்கேற்றாா்.

கோயில் தலைமை சிவாசாரியா் விஜயகுமாா் போகில், சிவாசாரியா் சிவமணி ஆகியோா் பூஜைகளை செய்து, பிரதமருக்கு தீா்த்தம், பிரசாதம் அளித்தனா். ராமரால் வழிபடப்பட்ட இந்தத் தலத்தில், ராம நவமியையொட்டி பிரதமா் வழிபாடு மேற்கொண்டாா்.

முன்னதாக, இந்து சமய அறநிலையத் துறை செயலா் கே. மணிவாசகன், ஆணையா் பி.எஸ். சீலன், இணை ஆணையா் செல்லத்துரை உள்ளிட்டோா் பிரதமா் மோடியை பாரம்பரிய முறைப்படி வரவேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com