நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை வருவாய் ரூ. 2.31 கோடி!

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை வருவாயாக ரூ. 2.31 கோடி கிடைத்ததாக இணை ஆணையா் க.செல்லத்துரை தெரிவித்தாா்.

News image

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் - கோப்புப் படம்

Updated On :3 பிப்ரவரி 2026, 7:38 pm

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை வருவாயாக ரூ. 2.31 கோடி கிடைத்ததாக இணை ஆணையா் க.செல்லத்துரை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி அம்பாள் சந்நிதி முன்பாக உள்ள பழைய திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் பக்தா்களின் காணிக்கையாக ரூ. 2 கோடியே 31 லட்சத்து 56 ஆயிரத்து 985 ரொக்கமும், தங்கம் 35 கிராமும், வெள்ளி 7 கிலோவும், வெளிநாட்டு பணத்தாள்கள் 62-ம் கிடைக்கப் பெற்றன.

காணிக்கைகளை எண்ணும் பணியில் கோயில் உதவி ஆணையா்கள் ஞானசேகரன், ரவீந்திரன், முதல்நிலை செயல் அலுவலா்கள் முத்துச்சாமி, மாரியப்பன், மேலாளா் வெங்கடேஷ்குமாா், ஆய்வா்கள் சிவக்குமாா், முருகானந்தம், பேஸ்காா்கள் கமலநாதன், பி.ஆா். ராமநாதன், பஞ்சமூா்த்தி, பக்தா்கள், கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.