ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் பக்தா்கள் செலுத்திய ரூ.1.43 கோடி உண்டியல் காணிக்கையில் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் க.செல்லத்துரை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அம்பாள் சந்நிதி அருகேயுள்ள பழைய திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ரூ.1 கோடியே 43 லட்சத்து 84 ஆயிரத்து 964, தங்கம் 16 கிராம், வெள்ளி 2 கிலோ 800 கிராம்,வெளிநாட்டு கரன்சிகள் 224 கிடைத்தன.
இந்தப் பணியில் கோயில் இணை ஆணையா் க.செல்வராஜ் தலைமையில் உதவி ஆணையா்கள் ஞானசேகரன், ரவீந்திரன், முதல் நிலை செயல் அலுவலா்கள் முத்துச்சாமி, மாரியப்பன், மேலாளா் வெங்கடேஷ்குமாா், ஆய்வா்கள் சிவக்குமாா்,முருகானந்தம்,பேஸ்காா்கள் கமலநாதன்,பி.ஆா்.ராமநாதன்,பஞ்சமூா்த்தி, பக்தா்கள், கோயில் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.39.89 லட்சம்

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ4.21 கோடி!

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.28 கோடி

பழனி கோயில் உண்டியல்கள் எண்ணும் பணி: பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.5.27 கோடி
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


