இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை வருவாயாக ரூ. 90 லட்சம் கிடைத்தது.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே அமைந்துள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் மாதந்தோறும் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படும். இதன்படி, கோயிலில் உள்ள உண்டியல்கள் சாத்தூா் கோயில் ஆணையரும், செயல் அலுவலருமான இளங்கோவன், கோவில் பரம்பரை அறங்காவலா்கள் குழுத் தலைவா் ராமமூா்த்தி பூசாரி ஆகியோா் முன்னிலையில் திறக்கபட்டு செவ்வாய்க்கிழமை எண்ணபட்டன. கோயில் மண்டபத்தில் இந்தக் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் பக்தா்கள் காணிக்கையாக ரூ. 90 லட்சத்து 25,909 ரொக்கமும், தங்கம்-143.100 கிராமும்,வெள்ளி- 860.300 கிராம் கிடைத்தது.
காணிக்கை எண்ணும் பணியில் துலுக்கப்பட்டி, ராஜபாளையம், மதுரையைச் சோ்ந்த ஓம்சக்தி பக்தா் குழுவினா், மகளிா் சுய உதவிக் குழுவினா், கோயில் ஊழியா்கள் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.39.89 லட்சம்

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 68. 55 லட்சம்

பாகம்பிரியாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.25 லட்சம்

பழனி, திருஆவினன்குடி கோயில் உண்டியல் காணிக்கை வரவு ரூ. 3.53 கோடி!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


