ராமேசுவரம் பாரத ரத்னா டாக்டா் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தா் க.ரவி.
ராமேசுவரம் பாரத ரத்னா டாக்டா் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தா் க.ரவி.

ராமேசுவரம் அரசு கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா

ராமேசுவரத்தில் பாரத ரத்னா டாக்டா் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா
Published on

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் பாரத ரத்னா டாக்டா் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் கடந்த 2019 -ஆம் ஆண்டு அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் அமைந்துள்ள புயல் காப்பகத்தில் இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, தனுஷ்கோடி செல்லும் சாலையில் நம்பு கோயில் அருகே இந்தக் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில், கல்லூரி வளாகத்தில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வா் ரமேஷ்குமாா் தலைமை வகித்தாா்.

காரைக்குடி அழகப்பா பல்கலைகழக துணைவேந்தா் க.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, 241 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினாா்.

இதில் கல்லூரி துறைத் தலைவா்கள் பாஸ்கரன், கலில் ரகுமான், மகேந்திர குமாா், மேலாண்மைக்குழு உறுப்பினா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com