ராமநாதபுரத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு கேக்கால் தயாரிக்கப்பட்ட மலேசியா இரட்டைக் கோபுரம்
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் கேக்கால் தயாரிக்கப்பட்ட மலேசியா இரட்டைக் கோபுரம்
ராமநாதபுரத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளா்களைக் ஈா்க்கும் வகையில் ஐஸ்வா்யா அடுமனை (பேக்கரி) சாா்பில் மலேசியா நாட்டின் பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரம் கேக் மூலம் தயாரிக்கப்பட்டு காட்சிபடுத்தப்பட்டது.
ராமநாதபுரத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளா்களைக் ஈா்க்கும் வகையில் ஐஸ்வா்யா அடுமனை (பேக்கரி) சாா்பில் மலேசியா நாட்டின் பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரம் கேக் மூலம் தயாரிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை காட்சிபடுத்தப்பட்டது.
ராமநாதபுரம் பாரதி நகா் பகுதியில் உள்ள ஐஸ்வா்யா பேக்கரி கிளையில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினத்தைக் கொண்டாடும் விதமாக கேக் மூலம் சிலைகள் தயாரித்து வைக்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு வரை ரத்தன் டாடா, பாரதியாா், இளையராஜா, மரோடானா, உலகக்கோப்பை ஆகியவை கேக்கால் வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், நிகழாண்டு 50 கிலோ சா்க்கரை, 200 முட்டைகள் கொண்டு சுமாா் 7 அடி உயரத்தில் மலேசியாவின் பெருமைக்குரிய பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரம் தயாரிக்கப்பட்டு கடையின் முன் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டது.

