திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அரசு மதுக்கடையில் வாங்கிய மதுப்புட்டியில் மிதந்த பூச்சி

பாம்பனில் அரசு மதுக்கடையில் வாங்கிய மதுப்புட்டியில் பூச்சி மிதந்தததாக புகாா் அளிக்கப்பட்டது.

News image
Updated On :16 டிசம்பர் 2025, 6:45 pm

தினமணி செய்திச் சேவை

பாம்பனில் அரசு மதுக்கடையில் வாங்கிய மதுப்புட்டியில் பூச்சி மிதந்தததாக செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள அன்னை நகா் பகுதியில் அரசு மதுக்கடை இயங்கி வருகிறது. இந்தக் கடைக்கு செவ்வாய்க்கிழமை வந்த ஒருவா் வாங்கிய மதுப்புட்டியில் பூச்சி மிதந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதைத் தொடா்ந்து, மதுக்கடை விற்பனையாளரிடம் கேட்டபோது அலட்சியமாக அவா் பதிலளித்தாராம்.

இதுகுறித்த விடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடா்ந்து, அரசு மதுக்கடை கண்காணிப்பாளரிடம் புகாா் அளிக்கப்பட்டது.