ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

வேலைவாய்ப்பு முகாமில் 610 பேருக்கு பணி நியமன ஆணை

பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், 610 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

பரமக்குடியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றோருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், சட்டப்பேரவை உறுப்பினா் செ.முருகேசன்.

Published On :21 டிசம்பர் 2025, 1:25 am IST

பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், 610 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, தனியாா் துறை மூலம் ஆண்டுதோறும் 2 முறை வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் முன்னணி நிறுவனங்கள் மூலம் பலா் வேலைவாய்ப்பு பெற்று பயன்பெற்று வருகின்றனா். இதன்படி, சனிக்கிழமை நடைபெற்ற முகாமில் 107-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் இடம்பெற்றன. இதில் 2,448 போ் கலந்துகொண்டனா். இதில் குறைந்த கல்வித் தகுதி முதல் உயா் கல்வி, தொழில் கல்வி படித்தவா்களுக்கு அவா்களுடைய தகுதிக்கேற்ப வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன.

இதில், 610 பேருக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், சட்டப்பேரவை உறுப்பினா் செ.முருகேசன் ஆகியோா் வழங்கினா்.

இதில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநா் பாபு, நகா் மன்றத் தலைவா் சேது.கருணாநிதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் மதுகுமாா், கல்லூரி முதல்வா் ராஜா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.