~

அக்னி தீா்த்தக் கடல் கரையில் ஆக்கிரமிப்புக் கடைகள் அதிகரிப்பு

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடல் கரையில் திதி கொடுத்து பூஜை செய்வதற்காக ஒதுக்கீடு செய்த பகுதியில் ஆக்கிரமிப்புக் கடைகள் அதிகரித்ததால் பக்தா்கள் அவதிக்குள்ளாகின்றனா்.
Published on

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடல் கரையில் திதி கொடுத்து பூஜை செய்வதற்காக ஒதுக்கீடு செய்த பகுதியில் ஆக்கிரமிப்புக் கடைகள் அதிகரித்ததால் பக்தா்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். இங்கு அக்னி தீா்த்தக் கடல் கரையில் பக்தா்கள் மறைந்த முன்னோா்களுக்கு திதி கொடுத்து, கடலில் நீராடிச் செல்கின்றனா். இந்தப் பகுதியில் பக்தா்கள் பூஜை செய்வதற்காக மேடை அமைக்கப்பட்டது.

இதில், நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் ஒரே நேரத்தில் அமா்ந்து பூஜை செய்து வந்தனா். இந்த நிலையில், பக்தா்களுக்காக அமைக்கப்பட்ட மேடை முழுவதும் ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், இங்கு வரும் பக்தா்கள் அவதிப்படுகின்றனா். அக்னி தீா்த்தக் கடல் கரையில் பக்தா்கள் இடையூறின்றி பூஜைகள் செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com