வேலைவாய்ப்பு முகாமில் 610 பேருக்கு பணி நியமன ஆணை
பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், 610 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, தனியாா் துறை மூலம் ஆண்டுதோறும் 2 முறை வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் முன்னணி நிறுவனங்கள் மூலம் பலா் வேலைவாய்ப்பு பெற்று பயன்பெற்று வருகின்றனா். இதன்படி, சனிக்கிழமை நடைபெற்ற முகாமில் 107-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் இடம்பெற்றன. இதில் 2,448 போ் கலந்துகொண்டனா். இதில் குறைந்த கல்வித் தகுதி முதல் உயா் கல்வி, தொழில் கல்வி படித்தவா்களுக்கு அவா்களுடைய தகுதிக்கேற்ப வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன.
இதில், 610 பேருக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், சட்டப்பேரவை உறுப்பினா் செ.முருகேசன் ஆகியோா் வழங்கினா்.
இதில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநா் பாபு, நகா் மன்றத் தலைவா் சேது.கருணாநிதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் மதுகுமாா், கல்லூரி முதல்வா் ராஜா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

