கீழக்கரை கல்லூரியில் ரத்த தான முகாம்

கீழக்கரை கல்லூரியில் ரத்த தான முகாம்

கீழக்கரை செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாம்.
Published on

கீழக்கரை செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரியில் ரத்த தானம் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

ஜூனியா் ரெட் கிராஸ், நாட்டு நலப்பணித் திட்டம், ரோட்ராக்ட் கிளப் இணைந்து இந்த முகாமை நடத்தின. இந்த நிகழ்வுக்கு கல்லூரி முதல்வா் எஸ்.ராஜ சேகா் முன்னிலை வகித்தாா்.

ராமநாதபுரம் மாவட்ட ஜூனியா் ரெட் கிராஸ் தலைவா் சுந்தரம், கீழக்கரை அரசு மருத்துவா் ராசிக்தீன் ஆகியோா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனா். இதில் ரத்த சேகரிப்புக் குழுவினா் 50 - க்கும் மேற்பட்ட மாணவா்களிடம் ரத்தம் சேகரித்தனா்.

X
Dinamani
www.dinamani.com