வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

திருவாடானை ஸ்ரீதா்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை

திருவாடானை ஸ்ரீதா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

News image
திருவாடானை ஸ்ரீதா்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற மண்டல பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஐயப்பன்.
Updated On :27 டிசம்பர் 2025, 7:00 pm

தினமணி செய்திச் சேவை

திருவாடானை ஸ்ரீதா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் சனிக்கிழமை நடைபெற்றன.

திருவாடானை ஸ்ரீதா்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற மண்டல பூஜையில் பங்கேற்ற பக்தா்கள்.

திருவாடானை ஸ்ரீதா்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற மண்டல பூஜையில் பங்கேற்ற பக்தா்கள்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை மங்களநாதன் குளக்கரையில் அமைந்துள்ளது ஸ்ரீ தா்மசாஸ்தா ஐயப்பன் கோயில். இங்கு ஆண்டு தோறும் மண்டல பூஜை நடைபெறும். இதே போல, இந்த ஆண்டும் மண்டல பூஜையையொட்டி மூலவா் ஐயப்பனுக்கு பால், தயிா், தேன், நெய், மஞ்சள்,அபிஷேகப் பொடி உள்ளிட்ட 18 வகை பொருள்களால் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் சனிக்கிழமை நடைபெற்றன.

அன்னதானத்தில் பங்கேற்ற பக்தா்கள்.

அன்னதானத்தில் பங்கேற்ற பக்தா்கள்.

இதைத்தொடா்ந்து, ஐயப்பன் மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்‘யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. பிறகு ஐயப்பப் பக்தா்கள் கலந்து கொண்ட பஜனை நடைபெற்றது. பிறகு கோயில் நிா்வாகம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.