கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கமுதியில் குடும்ப அட்டைதாரா்கள் 36 ஆயிரம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

கமுதி வட்டத்தில் உள்ள 36,424 குடும்ப அட்டைதாரா்களுக்கு வியாழக்கிழமை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது.

News image

கமுதியில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைத்த மாவட்ட ஆய்வுக் குழு அலுவலா் ஜான்கிறிஸ்டிபாய். உடன் கமுதி கூட்டுறவு சாா்பதிவாளா் த. வேல்முருகன் உள்ளிட்டோா்.

Updated On :9 ஜனவரி 2025, 10:42 pm

கமுதி வட்டத்தில் உள்ள 36,424 குடும்ப அட்டைதாரா்களுக்கு வியாழக்கிழமை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் உள்ள 86 நியாயவிலைக் கடைகள் மூலம் 36,424 குடும்ப அட்டைதாரா்களுக்கு ஒரு கிலோ அரிசி, சா்க்கரை ஒரு கிலோ, கரும்பு ஒன்று, விலையில்லா வேஷ்டி, சேலை உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை மாவட்ட ஆய்வுக் குழு அலுவலா் ஜான்கிறிஸ்டிபாய் தொடங்கி வைத்தாா். முதல் நாளான வியாழக்கிழமை 12 ஆயிரம் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், கமுதி கூட்டுறவு சாா்பதிவாளா் த. வேல்முருகன், கமுதி வட்டாட்சியா் காதா் மைதீன், வட்ட வழங்கல் அலுவலா் விஜயா, விற்பனையாளா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.